உள்ளூர் செய்திகள்

108 ஆம்புலன்சில் பணிபுரிய 15-ந்தேதி வேலை வாய்ப்பு முகாம் -தருமபுரி திட்ட மேலாளர் அறிக்கை

Published On 2022-11-12 15:11 IST   |   Update On 2022-11-12 15:11:00 IST
  • ஆட்சேர்ப்பு முகாம் வருகின்ற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று தருமபுரி மாவட்ட பெரியார் மன்றத்தில் நடைபெற உள்ளது.
  • ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகிய இரண்டு பணிகளுக்கும் ஆண், பெண் ஆகிய இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

தருமபுரி,

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இச்சேவையில் பணிபுரிய ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆட்சேர்ப்பு முகாம் வருகின்ற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று தருமபுரி மாவட்ட பெரியார் மன்றத்தில் நடைபெற உள்ளது.

தகுதியுள்ள ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த திட்ட மேலாளர் ரஞ்சித் மற்றும் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஓட்டுனர்களுக்கு 10 மண் வகுப்பு தேர்ச்சி மற்றும் அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாத ஊதியம் ரூ.14,766 (மொத்த ஊதியம்) வயது நேர்முகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் உயரம் 162.5 சென்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

கனரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ச் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.மாத ஊதியம் ரூ.14,966 ( மொத்த ஊதியம்). வயது நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயது மிகாமலும் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகிய இரண்டு பணிகளுக்கும் ஆண், பெண் ஆகிய இருபாலரும் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யும் நபர்கள் 12 மணி நேர சுழற்சி முறையில் தமிழகம் முழுவதும் பணியமர்த்தப்படுவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News