உள்ளூர் செய்திகள்

சங்காபிஷேக விழாவில் கலந்து கொண்ட தருமபுரம் ஆதீனம்.

திருக்கடையூர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்; தருமை ஆதீனம் பங்கேற்பு

Published On 2022-11-22 14:04 IST   |   Update On 2022-11-22 14:04:00 IST
  • புனிதநீர் அடங்கிய சங்குகளில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளத்தாளத்துடன் கோவிலை வலம் வந்தது.
  • வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய சங்குகளில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளத்தாளத்துடன் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வலம் வந்து. பின்னர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வண்ண வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் வீதி உலா புறப்பாடு காட்சி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News