செய்திகள்

மலிவு விலை மேக்புக்: விரைவில் அறிமுகம் செய்யும் ஆப்பிள்?

Published On 2017-06-02 15:32 IST   |   Update On 2017-06-02 15:32:00 IST
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெலப்பர் கான்பெரன்ஸ் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ப்ரோ, மலிவு விலை மேக்புக் சாதனங்கள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:

ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்வு (WWDC) அடுத்த வாரம் துவங்குகிறது. புதிய மென்பொருள் மற்றும் புதிய செயலிகளை ஆப்பிள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மென்பொருள் மட்டுமின்றி வன்பொருள் சார்ந்த சாதனங்களையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக கூறப்படுகின்றது.

ஜூன் 5-ந்தேதி நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் மற்றும் மேக்புக் ப்ரோ சாதனங்களை வெளியிடும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் மேக் ஒ.எஸ். மற்றும் ஐ.ஒ.எஸ். இயங்குதளங்களை அறிமுகம் செய்யவுள்ளது. 

ஆப்பிள் நிறுவனம் 15-இன்ச் மேக்புக் ப்ரோ ஒன்றையும், புதிய லேப்டாப் பார்க்க பழைய மாடலை போன்றே காட்சியளிக்கும் என்றும், இதில் கேபி லேக் பிராசஸர் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆப்பிள் வெளியிட்ட 12 இன்ச் மேக்புக் சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட மாடலை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



இத்துடன் புதிய மேக்புக் ஏர் சாதனத்தை வெளியிட உள்ளதாகவும் புதிய லேப்டாப்பில் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மேக் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கு கடந்த சில காலாண்டுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக அந்நிறுவனம் மேக்புக் சாதனங்களில் அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் மேக்புக் ஏர் லேப்டாப்களின் துவக்க விலை ரூ.55,000 முதல் துவங்குகிறது. இந்நிலையில் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ஆப்பிள் லேப்டாப்பின் புதிய மாடல் விலை சரியாக நிர்ணயம் செய்யப்படும் பட்சத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்றே ஆப்பிள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News