செய்திகள்

ஆப்பிள் ஐ.ஒ.எஸ். 10.3.2 வெளியானது: ஏற்கனவே இன்ஸ்டால் செய்தவர்கள் புலம்பல்

Published On 2017-05-21 11:51 GMT   |   Update On 2017-05-21 11:51 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எஸ். இயங்குதளத்தின் 10.3.2 பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் செய்தவர்கள் மற்ற ஐபோன் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளனர்.
சான்பிரான்சிஸ்கோ:

ஆப்பிள் நிறுவனம் ஐ.ஒ.எஸ். இயங்குதளத்திற்கு 10.3.2 அப்டேட் வழங்கியுள்ளது. இந்த அப்டேட் ஐபோன் 5, நான்காம் தலைமுறை ஐபேட் மற்றும், ஆறாம் தலைமுறை ஐபாட்களுக்கு இந்த அப்டேட் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பிழைகளை மாற்றம் செய்யும். 

ஆப்பிள் செக்யூரிட்டி பக்கத்தின் படி ஐ.ஓ.எஸ். 10.3.2 அப்டேட் சஃபாரி, AVEவீடியோ என்கோடர், கோர்ஆடியோ, ஐபுக்ஸ், ஐஓசர்ஃபேஸ், கெர்னல், நோட்டிபிகேஷன் உள்ளிட்டவற்றில் பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   



ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பவர்கள், புதிய அப்டேட்டினை டவுன்லோடு செய்ய செட்டிங்ஸ் மெனுவில் உள்ள சாப்ட்வேர் அப்டேட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அப்டேட் செய்யும் முன் உங்களது ஐபோன் தரவுகளை ஐகிளவுடில் பேக்கப் எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். இத்துடன் ஐபோன் வைபை இணைப்பில் இருப்பதையும், சார்ஜ் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும்.

புதிய அப்டேட்டினை ஐடியூன்ஸ் மூலமாகவும் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே புதிய அப்டேட்டினை இன்ஸ்டால் செய்தவர்கள், ஆப்பிள் அதிகாரப்பூர்வ தளம் மற்றும் சமூக வலைத்தளத்தில் தங்களது சாதனங்களில் பேட்டரி சீக்கிரம் பாழாகி விடுவதாக குறிப்பிட்டு வருகின்றனர். இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களில் புதிய அப்டேட் ஐபோன் மட்டுமின்றி ஐபேட் மற்றும் ஐபாட் டச் சாதனங்களையும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News