செய்திகள்
டி.இமான்

தமிழ் இசைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி - டி.இமான் பெருமிதம்

Published On 2021-03-23 00:34 IST   |   Update On 2021-03-23 00:34:00 IST
கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
சென்னை:

இந்திய திரைப்பட துறைக்கு உயரிய விருதாகக் கருதப்படும் தேசிய விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே, 2019-ம் ஆண்டுக்கான 67-வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 7 விருதுகளை தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளது.

சிறந்த தமிழ் படம் - அசுரன்

சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்)
 
சிறந்த இசையமைப்பாளர் - டி.இமான் (விஸ்வாசம்)

சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாகா விஷால் (கே.டி. எனும் கருப்புதுரை)

சிறந்த ஒலிக்கலவை - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)

சிறப்பு பிரிவு, ஜூரி விருது - ஒத்த செருப்பு (தமிழ்)

இந்நிலையில், தமிழ் இசைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி என இசையமைப்பாளர் டி.இமான் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டி.இமான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆண்டவன் அருள், என் பெற்றோரின் ஆசி மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் இசைப்பிரியர்களின் ஆதரவால் இது சாத்தியமாகி இருக்கிறது.

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி. தமிழ் இசைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது தனி மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.

Similar News