செய்திகள்
கோப்பு படம்

"எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைகிறார்" - எஸ்.பி. சரண் தகவல்

Published On 2020-09-19 19:48 IST   |   Update On 2020-09-19 19:48:00 IST
எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைந்து வருகிறார் என அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அவருடைய மகன் எஸ்பிபி சரண் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்த வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று (செப்டம்பர் 19) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

எனது அப்பா எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைகிறார்.

அவர் நேற்றில் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறார்.

மருத்துவர்கள் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எழுந்து உட்காருகிறார்.

அவருக்கு தொடர்ந்து மருத்துவக்குழு தீவிர சிசிச்சை அளித்து வருகிறது.

Similar News