செய்திகள்
கோப்பு படம்.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம்- மகன் சரண் தகவல்

Published On 2020-08-16 19:48 IST   |   Update On 2020-08-16 19:48:00 IST
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

நேற்றுமுன்தினம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்கள்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

அதன்பின்னர், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், மயக்கநிலையில் இருந்த எஸ் பாலசுப்ரமணியத்திற்கு நினைவு வந்திருப்பதாகவும், மருத்துவர்களிடம் கையசைத்தார் என்றும் அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நலம் பெற்று வருவதால் மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News