செய்திகள்

மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

Published On 2017-04-28 02:01 IST   |   Update On 2017-04-28 02:01:00 IST
மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக மகாராஷ்டிரா போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
மும்பை:

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்தரா ஆகிய இருவர் தனியார் நிறுவனத்திடம் பணம் வாங்கி கொண்டு அவர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

டெக்ஸ்டைல் நிறுவனத்திடம் ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் தானே பிவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது. அந்த புகாரின் பேரில் போலீசார் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்தரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்தரா இருவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என்று மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஷில்பா ஷெட்டி ஏற்கனவே மோசடி புகார்களில் சிக்கி உள்ளார். மும்பையில் அவர் நடத்தி வந்த நிறுவனம் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்த எம்.கே. மீடியா நிறுவனத்திடம் இருந்து ரூ.9 கோடியை அவர் பெற்றுக் கொண்டதாகவும், 2 ஆண்டுகளில் 10 தவணையாக இந்த பணம் திருப்பி தரப்படும் என்றும், அவரது நிறுவனத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பங்குகள் எம்.கே. மீடியா நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்ததாக புகார்கள் எழுந்தது.

Similar News