கதம்பம்
அழகும் ஆரோக்கியமும்

அழகும் ஆரோக்கியமும்

Published On 2022-04-29 11:13 GMT   |   Update On 2022-04-29 11:13 GMT
இருப்பது ஒரே வாழ்க்கை. இதைத் தேவையில்லாத விஷயங்களை ரொம்ப யோசித்து வீணடிக்காமல் ஜாலியாக இருங்கள். இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். மனது ரிலாக்ஸாக இருந்தால் முகமும் பளிச்சென இருக்கும்.
அழகு என்பது ஆரோக்கியம்தான். சோர்வாக, டல் அடிக்காமல் பளிச் என்று சுறுசுறுப்பாக இருக்கும் எல்லாமே அழகுதான். நான் பின்பற்றும் ஆரோக்கியக் குறிப்புகள்:-

1. பவுடர், க்ரீம், டை என எதையும் பயன்படுத்துவதில்லை.

2. தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய். அதில் கருவேப்பிலையைக் கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம். ரொம்பத் தேங்காய் எண்ணெய் தேய்த்தால் முகம் எண்ணெய் வழியும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு மட்டும் தேய்க்கலாம். அவ்வப்போது கண்டிஷனர், ஷேம்பூ போட்டுக் கொள்ளலாம்.

3. உணவுப் பழக்கம் ரொம்ப முக்கியம். விரதம் இருக்கும் போது உடலில் கழிவுகள் நீங்கி detox ஆகி ஃப்ரெஷ் ஆக உணரலாம்.

4. டயட் என்ற பெயரில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படக்கூடாது. பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும். வைட்டமின்கள் தேவை. நான்வெஜ் சாப்பிடுவோர் முட்டை தவறாமல் சேர்க்கவும்.

5. வைட்டமின் ஈ, வைட்டமின் சி மிகவும் முக்கியம் தோலின் ஆரோக்கியத்துக்கு. பாதாம், வேர்க்கடலை , எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு ஆகியவற்றைத் தினம் பயன்படுத்தவும்.

6. இரும்புச் சத்துக்கு பேரீச்சை சேர்க்கவும். ஹீமோக்ளோபின் ரத்தத்தில் குறைந்தால் வெளிறி ஒளியிழந்து இருப்போம்.

7. தேவையில்லாமல் கண்ட எண்ணெயில் பொறித்த நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டாம். அந்த எண்ணெய்களில் ட்ரான்ஸ் கொழுப்பு அதிகம் இருக்கும். நல்ல கொழுப்புகளான வெண்ணெய், நெய், பாதாம் ஆகியவற்றைச் சேர்க்கவும். ஆரோக்யமான தோலுக்கு நல்ல கொழுப்பு மிக முக்கியம். ஒமேகா 3 கொழுப்புகள் பாதாம் போன்றவற்றில் இருக்கும்.

8. புரதம் மிக முக்கியம். வேக வைத்த, முளை கட்டிய பயிறுகள், வேர்க்கடலை முட்டை ஆகியவை சேர்க்கலாம்.

9. பளிச் தோற்றத்துக்கு நல்ல தூக்கம் மிக மிக முக்கியம். 6-8 மணி நேரத் தூக்கம் மிகவும் அவசியம்.

10 .உடற்பயிற்சி ரொம்ப முக்கியம். நல்ல ரத்த ஓட்டம் இருந்தால் பளிச்சென இருக்கலாம்.

11. இருப்பது ஒரே வாழ்க்கை. இதைத் தேவையில்லாத விஷயங்களை ரொம்ப யோசித்து வீணடிக்காமல் ஜாலியாக இருங்கள். இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். மனது ரிலாக்ஸாக இருந்தால் முகமும் பளிச்சென இருக்கும்.

-டாக்டர் ஜி ராமானுஜம்
Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்