கதம்பம்
சமையலறை

குடும்பத்தை காக்கும் சமையலறை

Published On 2022-03-30 11:16 GMT   |   Update On 2022-03-30 11:16 GMT
1971-ல் மொத்த குடும்பங்களில் கணவன்-மனைவி குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம். 2020-ல் அது 20 சதவிகிதமாக நலிந்து விட்டது.
1960-70 ஆண்டுகளில் “சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது;  குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்” என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள் அமெரிக்க பொருளாதார நிபுணர்கள்.

அதாவது அந்த காலகட்டத்தில் வீட்டில் சமைப்பதை நிறுத்தி விட்டு கடைகளில் வாங்கி உண்ணும் பழக்கம் வந்தது. இதனால், அவர்கள் எச்சரித்தபடியே அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன.

வீட்டில் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது. சமையல் அறை இல்லாது, வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான். சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன?

1971-ல் மொத்த குடும்பங்களில் கணவன்-மனைவி குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம். 2020-ல் அது 20 சதவிகிதமாக நலிந்து விட்டது.

அன்று வீடு என்பது குடும்பங்களாக இருந்தன, இன்று தங்கும் வீடுகளாகிவிட்டன. அமெரிக்காவில் இப்போது பெண்கள் தனித்திருக்கும் வீடுகள் 15 %. ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள் 12%.

19% வீடுகள் அப்பாவோ, அம்மாவோ மட்டுமே இருக்கும் வீடுகள். 6% வீடுகள் ஆண்-பெண் சேர்ந்து தங்குமிடங்கள்.

இன்று பிறக்கும் மொத்த குழந்தைகளில் 41% திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கின்றன. அதில் பாதி குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளுக்கு.

இந்த அலங்கோலத்தால் அமெரிக்காவில் 50%  முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. 67 % இரண்டாவது திருமணங்களும், 74% மூன்றாவது திருமணங்களும் விவகாரத்தாகின்றன.

வெறும் படுக்கை அறை மட்டும் குடும்பம் அல்ல. சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால் குடும்பம் நிலைகுலைந்துவிடும் என்பதற்கு அமெரிக்கா சிறந்த உதாரணம்.

குடும்பங்கள் அழிந்தால் மனநலமும் உடல் நலமும் சீரழியும். வெளியில் சாப்பிடுவதால் உடல் ஊதிப்போகிறது. ஏராள தொற்று வியாதிகள் வருகின்றன. சேமிப்பும் குறைகிறது. எனவே சமையல் அறை என்பது குடும்ப நலனுக்கு மட்டும்  அல்ல, உடல் நலம், மன நலம், பொருளாதார நலனுக்குக்கூட அவசியம்.

-பி.சுந்தர்
Tags:    

Similar News

இலவசம்