செய்திகள்

தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க எதிர்கட்சியினர் சதி - பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2018-06-29 11:21 IST   |   Update On 2018-06-29 11:43:00 IST
தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க எதிர்கட்சியினர் சதி செய்கின்றனர் என்று திருச்செந்தூரில் பொன்.ராதாகிருஷ்ணன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PonRadhakrishnan #GreenWayRoad

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய ரெயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் இணைந்து மக்களை ஏமாற்றுகின்றனர். இதைத் தொடர விடக்கூடாது. இது நல்லதல்ல. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற போது அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. நாத்திகம் பேசும் கொள்கை கொண்ட அவருக்கு கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது தொடர்பாக அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வளர்ச்சி மற்றும் விவசாயத்தை பற்றி அறியாத அப்பாவி மக்களை தூண்டி விட்டு எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்த வைக்கின்றனர். டெல்லியில் 14 வழிச்சாலை அமைக்க ஏற்பாடு நடக்கிறது. அங்கு இத்தகைய எதிர்ப்பு ஏற்பட வில்லை.

காஷ்மீரில் பா.ஜ.க. 356 பயன்படுத்தி ஆட்சியை கலைக்கவில்லை. நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றோம். பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கவிழ்ந்தது. தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க எதிர்கட்சியினர் சதி செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #GreenWayRoad

Tags:    

Similar News