செய்திகள்
மாணவர்களின் வீட்டுக்கே சென்று கவுன்சிலிங் வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கவும் தற்கொலை எண்ணங்கள் தோன்றாமல் தவிர்க்க அவர்களின் வீட்டுக்கே சென்று கவுன்சிலிங் அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டியில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் சந்தேகங்களை போக்கிடவும், புதியதாக கல்லூரிகளில் சேர்வது, தேர்வு முறைகள் உள்ளிட்ட எந்தவொரு கேள்விகளுக்கும் 24 மணி நேரமும் பதிலளிக்கும் வகையில் 14417 என்ற ஹெல்ப்லைன் வசதி விரைவில் தொடங்கப்படும்.
மாணவர்கள் மன அழுத்தத்தை போக்கவும் தற்கொலை எண்ணங்கள் தோன்றாமல் தவிர்க்க சிநேகா என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களின் வீட்டிற்கே சென்று கவுன்சிலிங் அளிக்கப்படும்.
புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவாக முதற்கட்டமாக 500 ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். தேர்வு முடிந்தவுடன் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை அளிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை தயார்நிலையில் உள்ளது. கோடைக்காலம் தொடங்குவதால் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களை கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Tamilnews