செய்திகள்
பிரதமர் மோடி வருகையால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும்- தமிழிசை சவுந்தரராஜன்
பிரதமர் நரேந்திரமோடியின் வருகையால் தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றம் ஏற்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்துக்கு நேற்று இரவு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடியின் வருகையால் தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றம் ஏற்படும். புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஊழல் அதிக அளவில் நடக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் எந்தவிதமான கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் ரூ.1,800 கோடியில் நவீன நகரமாக்கும் திட்டத்தை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுதான் கொண்டு வந்துள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இப்போதுதான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை. அவர்கள் முதலில் நடை போடட்டும். அதன் பிறகு நாங்கள் அவர்களை எடைபோடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews