செய்திகள்

தினகரனுக்கு ஆதரவு: புகழேந்தி கருத்துக்கு செங்கோட்டையன் பதில்

Published On 2017-10-28 12:23 IST   |   Update On 2017-10-28 12:23:00 IST
சசிகலா, டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகழேந்தி கூறிய கருத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
கோபி:

அ.தி.மு.க. (அம்மா) அணி கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, அமைச்சர் செங்கோட்டையன் இதுவரை சசிகலா பற்றியோ தினகரன் பற்றியோ தவறாக பேசியது இல்லை. பொதுவாக கொங்கு மண்டல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மரியாதையுடன் உள்ளனர். எனவே அவர்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவது தெரிய வருகிறது என்று கூறினார்.


இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து கோபியில் அவர் நிருபரிடம் கூறியதாவது:-

நான் அரசியலிலும் பொதுவாழ்விலும் பச்சோந்தியாக மாறுபவன் அல்ல. நேர்மையாக செயலாற்றி வருகிறேன்.

நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களில் சிறப்பாக அரசியல் செய்தவன். எனது அரசியல் வயதுகூட அவருக்கு (புகழேந்தி) இல்லை. அவர் என்னை பற்றி கூறிய கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News