செய்திகள்

மதுரையில் பால் பதப்படுத்தும் ஆலை, ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகம்: பட்ஜெட்டில் தகவல்

Published On 2017-03-16 06:48 GMT   |   Update On 2017-03-16 06:48 GMT
மதுரையில் பால் பதப்படுத்தும் ஆலை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் அரசின் வரவு-செலவு உள்ளிட்ட விவரங்கள் மற்றும் பல்வேறு திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. பட்ஜெட்டில் உள்ள சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

* உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* 6 லட்சம் வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு வழங்கப்படும் - இதற்கு ரூ. 182 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* ஏழைகளுக்கு 12 ஆயிரம் பசுக்கள், 6 லட்சம் ஆடுகள் வழங்கப்படும்

* நாட்டு மரபின மாடுகளை பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு

* 25 புதிய கால்நடை கிளை மையங்கள் உருவாக்கப்படும்



* கோழிப்பண்ணை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

* ஆவின்பால் பொருட்களை பிரபலப்படுத்த 200 புதிய பாலகங்கள்

* மதுரையில் ரூ.40 கோடி செலவில் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும்



* வார்தா புயல் மறுசீரமைப்பு பணிக்காக ரூ.585 கோடி செலவு செய்யப்படும்.

* மீன்வளத்துறைக்கு ரூ.860 கோடி ஒதுக்கீடு

* மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்

* படகு டீசல் அளவு 15,000 லிட்டரில் இருந்து 18,000 லிட்டராக உயர்வு

* ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் ரூ.113 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.


Similar News