செய்திகள்

நீதிமன்றத்திற்கு சென்று வழக்கை சந்திக்க வேண்டும்: ராமமோகனராவ் மீது வைகோ தாக்கு

Published On 2016-12-28 07:41 GMT   |   Update On 2016-12-29 06:39 GMT
தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ் சுத்தமானவராக இருந்திருந்தால் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கை சந்திக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
திருச்சி:

தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ இன்று திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் வார்தா புயல் கடந்த 12-ந்தேதி தாக்கியது. இதில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. சேதங்களை பார்வையிட உடனே வருமாறு மத்திய அரசு குழுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வரவில்லை.

இந்நிலையில் இன்று மத்திய குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் உடனே வந்திருந்தால் சேத பாதிப்புகளை நேரிடையாக பார்வையிட்டு இருக்கலாம். இப்போது பாதிப்புகள் எல்லாம் சரி செய்யப்பட்ட பின்னர் வருகிறார்கள். இப்போது அவர்களால் பாதிப்பு குறித்த புகைப்படங்களை மட்டுமே பார்வையிட்டு செல்ல முடியும். மத்திய நிர்வாக குழு சரியாக செயல்படாததே காரணம். இது என்ன விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ் சுத்தமானவராக இருந்திருந்தால் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கை சந்திக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதி போல் மக்கள் மன்றத்தில் பேசுகிறார். இது தவறான வழிமுறை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News