செய்திகள்
தேர்தலில் முறைகேடு நடந்தால் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய சட்டம் வேண்டும்: ஜி.கே.மணி சொல்கிறார்
தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் தேர்தலை ரத்து செய்யவும், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது-
ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் மறுபடியும் அறிவிக்கப்பட்டதும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வருகிறேன்.
உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு அறிவிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பொது வார்டுகள், பெண்களுக்கான பொது வார்டுகள், ஆதிதிராவிடர், மலைவாழ் மக்களுக்கான பொது வார்டுகள், ஆதிதிராவிடர் பெண்களுக்கான வார்டுகள் குறித்து குளறுபடியான இடஒதுக்கீடு பட்டியல் அறிவிக்கப்பட்டது. எனவே அடுத்து தேர்தல் அறிவிக்கும் முன்பு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இடஒதுக்கீடு வார்டுகளை சீராக வரையறை செய்து உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீட்டு பட்டியலை வரைமுறைப்படுத்தி முறையாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே அறிவித்தபடி தனித்து போட்டியிடும். வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். கடந்த முறை 2 தொகுதிகளில் தேர்தல் முறைகேடு நடந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. இதுபோன்ற தேர்தல் முறைகேடுகள் நடந்தால் தேர்தலை ரத்து செய்யவும், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.