செய்திகள்

காவிரி விவகாரம்: கர்நாடக தேர்தலுக்காக மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது- நல்லக்கண்ணு பேட்டி

Published On 2016-10-17 04:39 GMT   |   Update On 2016-10-18 08:25 GMT
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் நடைபெற உள்ள தேர்தலை மனதில் வைத்தே மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று ஆர்.நல்லக்கண்ணு கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

நதிநீர் மேலாண்மை வாரியம் என்பது மத்திய அரசு நியமித்தது. மேலும் இது மத்திய அரசிதழிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே இதனை மத்திய அரசு அங்கீகரித்ததாகத்தான் பொருள்படும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. கர்நாடகத்தில் நடைபெற உள்ள தேர்தலை மனதில் வைத்தே மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது, புறக்கணிக்கிறது.

பல்வேறு மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு சுமூகமாக செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்சனையில் மட்டும் மத்திய அரசு பாராளுமன்றத்தை கூட்டப்போவதாக கூறுவது ஜனநாயகம் இல்லை. இது தவறான முன் உதாரணமாகும்.

காவிரி பிரச்சனையில் தமிழகத்தில் குரல், ஒரே குரலாக ஒலிக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் நிதி அமைச்சரை சந்தித்து பேசி இருப்பது ஆரோக்கியமான அரசியல்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News