லைஃப்ஸ்டைல்
பெண்ணுரிமை

பெண்ணுரிமைக்கு எதிரான சில பிற்போக்குத்தனங்கள்

Published On 2020-04-30 03:17 GMT   |   Update On 2020-04-30 03:17 GMT
உலகம் இன்று எவ்வளவோ முன்னேற்றங்களை கண்டுவிட்ட போதும் பெண்ணுரிமைக்கு எதிரான சில பிற்போக்குத்தனங்கள் அரங்கேறி வருவதையும் பார்க்கிறோம்.
1921 மார்ச் 8, பெண்களின் சுதந்திர சிறகுகளை பிணைத்திருந்த கட்டுப்பாடுகள் எனும் விலங்குகள் பலவற்றை நொறுக்கிய மகிழ்ச்சியை கொண்டாட முன்வந்த முதல் நாள். அன்று முதல் ஆண்டுதோறும் மார்ச் 8 உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலகம் இன்று எவ்வளவோ முன்னேற்றங்களை கண்டுவிட்ட போதும் பெண்ணுரிமைக்கு எதிரான சில பிற்போக்குத்தனங்கள் அரங்கேறி வருவதையும் பார்க்கிறோம். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா மட்டத்திலும் பெண்ணடிமைத்தனம் வெவ்வேறு வடிவங்களில் தன் கோரமுகத்தை காட்டிக்கொண்டே தான் இருக்கிறது.

தாய்வழி சமூக கூறுகளை கொண்ட சமூகங்கள் அனைத்தும் பெண்ணுரிமையையும், பெண்களுக்கான சுதந்திரத்தையும் இயல்பாகவே வழங்கி வந்துள்ளன. இந்திய சமூகங்களில் பெரும்பாலானவை தாய்வழி சமூக மரபு கொண்டவையே. குடும்பத்தில் பல முக்கிய பொறுப்புகளை பெண்களிடமே வழங்குவது, வீட்டின் மூத்த பெண்ணின் பெயரை சொல்லி சந்ததியினரை அடையாளப்படுத்தி கொள்வது உள்ளிட்டவையே தாய்வழி மரபு. பழங்குடி இனத்தவரிடம் இன்று வரை இந்த மரபு மாறாமல் நிற்கிறது.

விதவை மறுமணம், பெண்களுக்கான சமூக, பொருளாதார, சமய உரிமைகளை வழங்குவது வரை ஆதியிலிருந்து ஒரே நிலைப்பாடு கொண்ட இனத்தவரும் உள்ளனர். குழந்தைகளுக்கு முதல்முறையாக முடி இறக்கும் போது தாய்மாமன் மடிக்கு பதிலாக குடும்பத்தில் உயிருடன் உள்ள மூத்த பெண்ணின் மடியில் குழந்தையை அமர்த்தி முடி இறக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. இப்படி, பெண்ணுரிமை தொடர்பாக நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.
Tags:    

Similar News