பெண்கள் மருத்துவம்
புற்றுநோய்

பெண்களை அதிகம் தாக்கும் நோய்களும், தடுக்கும் வழிமுறைகளும்...

Published On 2022-05-07 06:27 GMT   |   Update On 2022-05-07 06:27 GMT
இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதுடன் அவர்களை அதிகம் பாதிப்பது மார்பக புற்றுநோய் என்பதும் தெரியவந்துள்ளது..
இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதுடன் அவர்களை அதிகம் பாதிப்பது மார்பக புற்றுநோய் என்பதும் தெரியவந்துள்ளது.. இதுவரை 50 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் அதிகமாக காணப்பட்ட இந்நோய், தற்போது முப்பது வயதிலேயே வருகிறது.

பெண்களை அதிக அளவில் தாக்கும் மற்றொரு நோய் கருப்பைவாய் புற்று நோய் ஆகும்.ஒவ்வொரு நாளும் இந்தியாவில் இருநூறு பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உலக அளவில் வருடத்துக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் இந்த புற்றுநோயால் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

அறிகுறிகள்:

* மாதவிடாயின் போது அதிக ரத்தம் வெளியேறுதல்

* வெள்ளைப்படுதல்

* இடுப்பு, முதுகு,கால்களில் கடுமையான வலி

* வாந்தி

* அதிக சோர்வு.

நோய் கண்டறிதல்- சிகிச்சை:

பாப்ஸ்மியர் சோதனை மூலமாக புற்றுநோய்க்கு முந்தைய நிலையை கண்டறிந்து, அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கலாம்..

தடுப்பு மருந்துகள் :

இந்தத் தடுப்பு மருந்துகள்,ஒன்பது முதல் பதிமூன்று வயதுள்ள சிறுமிகளுக்கு கொடுப்பதன் மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் காப்பாற்ற முடியும்..

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க சில யோசனைகள்:

* தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

* அதிக அமிலத்தன்மை உடைய உணவுகளை தவிர்க்க வேண்டும். ஒமேகா 3, பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

* குழந்தைப் பேற்றுக்கு மத்தியில் போதிய இடைவெளி இருக்க வேண்டும்.

* பிறப்புறுப்பை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்..மாதவிடாயின் போது சானிட்டரி நாப்கின்களை மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

* கழிப்பறை மற்றும் வசிக்கும் இடத்தில் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.
Tags:    

Similar News