பெண்கள் மருத்துவம்
கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் இருந்து சிசுவிற்கு கிடைக்கும் சத்துக்கள்

கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் இருந்து சிசுவிற்கு கிடைக்கும் சத்துக்கள்

Update: 2022-04-29 06:22 GMT
கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் இருந்து தான் குழந்தைக்கு அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. மருத்துவரின் அனுமதி பெற்ற பின்னர் நீங்கள் இதனை உண்பது மிக மிக சிறந்ததாகும்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் உணவுகள் தான் குழந்தைக்கு அதிகமாக சத்துக்களை கொடுக்கின்றன. குழந்தைகளின் மூளை, எலும்புகள் போன்ற ஒவ்வொரு பகுதிகளும் வலுப்பட தாய் சாப்பிடும் உணவுகள் முக்கியப்பங்கு வகிக்கிறது. நாம் உண்ணுகின்ற உணவானது, உடலுக்கும், உள்ளத்திற்கும் உறுதியைத் தருவதாக இருக்க வேண்டும். நிறைய கீரைகள், காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், பருப்பு வகைகள் ஆகியவை சைவப் பிரியர்களின் அன்றாட உணவில் அவசியம் இருக்க வேண்டும்.

அசைவப் பிரியர்கள் இறைச்சி, இறால், மீன், நண்டு, முட்டை முதலியவை மூலம் முழுமையாக உண்கிறார்கள். சைவமோ, அசைவமோ எதுவாக இருப்பினும், அந்த உணவு வகைகளில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து, மாவுச்சத்து முதலியவை முக்கிய பங்கை வகிக்க வேண்டும். முட்டை என்பது ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதில் அதிகளவு புரோட்டின் சத்துக்கள் அடங்கியுள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஆரோக்கியத்தை முட்டை அள்ளித்தருகிறது.

கர்ப்ப காலத்தில் எந்த காரணத்தை கொண்டும் முட்டை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். கர்ப்ப காலத்தில் முட்டை, நிலக்கடலை, மீன் போன்றவற்றை சாப்பிடுவதால், பிறக்க போகும் உங்களது குழந்தைக்கு எந்த விதமான உணவு அலர்ஜியும் ஏற்படாமல் இருக்கும்.

நீங்கள் சாப்பிடும் உணவில் இருந்து தான் குழந்தைக்கு அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. மருத்துவரின் அனுமதி பெற்ற பின்னர் நீங்கள் இதனை உண்பது மிக மிக சிறந்ததாகும்.
Tags:    

Similar News