பெண்கள் உலகம்

கருவிலேயே டவுன்சிண்ட்ரோம் குழந்தைகளை அடையாளம் காண்பது எப்படி ...?

Published On 2024-04-15 09:30 GMT   |   Update On 2024-04-15 09:30 GMT
  • ஸ்க்ரீனிங் சோதனைகள் கருவின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுகிறது.
  • கர்ப்பத்தின் 11 முதல் 14 வாரங்களுக்கு இடையில் செய்யப்படுகிறது.

30 வயதுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் 1000 பெண்களில் ஒருவர் டவுன் சிண்ட்ரோம் குழந்தையை பெற்றெடுக்க வாய்ப்பு உள்ளது. 35 வயதுக்கு மேல் கர்ப்பமாக இருந்தால் 400 பெண்களில் ஒருவர் டவுன் சிண்ட்ரோம் குழந்தையை பெற்றெடுக்க வாய்ப்புண்டு. 42 வயதில் கர்ப்பமாக இருந்தால் 60 பெண்களில் ஒருவர் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை பெற்றெடுக்க வாய்ப்புண்டு. 49 வயதில் கர்ப்பமாக இருந்தால் 12 பெண்களில் ஒருவர் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை பெற்றெடுக்க வாய்ப்புண்டு.

டவுன் நோய்க்குறிக்கான ஸ்க்ரீனிங் சோதனைகள் கருவின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுகிறது. இதற்கு செலவு குறைவு கண்டறிவதும் எளிதாக இருக்கும். டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை கண்டறிய சோதனைகளை நடத்தலாமா என்பதை பெற்றோருக்கு தீர்மானிக்க இவை உதவுகின்றன.

நுச்சல் ஒளி ஊடுருவல் சோதனை (என்.டி)

இந்த பரிசோதனை பெண் கர்ப்பத்தின் 11 முதல் 14 வாரங்களுக்கு இடையில் செய்யப்படுகிறது. ஒரு அல்ட்ராசவுண்ட் வளரும் குழந்தையின் கழுத்தின் பின்னால் உள்ள திசுக்களின் மடிப்புகளில் தெளிவான இடத்தை அளவிடுகிறது.

டவுன் சிண்ட்ரோம் குழந்தைக்கு இந்த இடத்தில் திரவம் அதிகமாக குவிந்திருக்கும். வழக்கத்தை காட்டிலும் இது பெரியதாக இருக்கும். இந்த பரிசோதனை தாய் வழி ரத்த பரிசோதனையை பின்பற்றி செய்யப்படுகிறது. அனுபவமிக்க நிபுணர்கள் இதை எளிதாக கண்டறிந்துவிட முடியும்.

 ட்ரிபிள் ஸ்க்ரீனிங் / நான்கு மடங்கு ஸ்க்ரினிங்

பல மார்க்கர் சோதனை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சோதனை கர்ப்பத்தின் 15 முதல் 18 வாரங்களில் அதாவது 3 மாத கர்ப்பத்தின் முடிவில் இருந்து 5 மாத காலத்துக்குள் செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையில் தாயின் ரத்தத்தில் பரிசோதனை செய்யப்பட்டு சாதாரணத்தன்மை கணக்கிடப்படுகிறது. 3 பரிசோதனைகளுக்காக மூன்று ஸ்க்ரீனிங் அல்லது நான்கு ஸ்க்ரீனிங் செய்யப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த பரிசோதனை

இந்த பரிசோதனை முதல் மூன்று மாத கர்ப்பகாலத்தில் செய்யப்படுகிறது. இது நுச்சல் ஸ்கேன் போல் இல்லாமல் முதல் மூன்று மாதம் மற்றும் இரண்டாவது மூன்று மாத காலம் போன்றவற்றின் ரத்த சோதனை பரிசோதனைகள் மூலம் பெறப்பட்ட முடிவுகளை ஒருங்கிணைக்கிறது. இது பெற்றோருக்கு துல்லியமான முடிவுகளை வழங்குகிறது.

மரபணு அல்ட்ராசவுண்ட் சோதனை

இந்த சோதனை 18 முதல் 20 வாரங்களுக்கு இடையில் செய்யப்படுகிறது. டவுன் சிண்ட்ரோம் நோய்க்குறியுடன் தொடர்பு கொண்டுள்ள எந்தவொரு உடல் அறிகுறிகள் மற்றும் ரத்த பரிசோதனைகளுடன் விரிவான அல்ட்ராசவுண்ட் கருவை பரிசோதிக்கிறது.

செல் இல்லாத டி.என்.ஏ

இது ரத்த பரிசோதனையாகும். தாயின் ரத்தத்தில் காணப்படும் கரு டி.என்.ஏ வை பகுப்பாய்வு செய்கிறது. இது முதல் மூன்று மாதங்களில் செய்யப்படுகிறது. இந்த சோதனை ட்ரைசோமி 21 ஐ துல்லியமாக கண்டறீகிறது. டவுன் சிண்ட்ரோம் கொண்டிருக்கும் குழந்தையை சுமக்கும் ஆபத்து கொண்ட பெண்களுக்கு இந்த சோதனை பரிந்துரைக்கப்படுகிறது.

Tags:    

Similar News