லைஃப்ஸ்டைல்
அலர்ஜி சருமமும்.. பாதுகாக்கும் முறையும்..

அலர்ஜி சருமமும்.. பாதுகாக்கும் முறையும்..

Published On 2021-09-02 03:49 GMT   |   Update On 2021-09-02 03:49 GMT
சரும அலர்ஜி இருப்பவர்கள், எதெல்லாம் தனக்கு அலர்ஜியாகிறது என்பதை முதலில் தெரிந்துகொண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
உடுத்தும் உடை முதல் உண்ணும் உணவு வரை எதுவும் இந்த வகை சருமத்தினருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். இத்தகைய சரும அலர்ஜி இருப்பவர்கள், எதெல்லாம் தனக்கு அலர்ஜியாகிறது என்பதை முதலில் தெரிந்துகொண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* சரும அலர்ஜிக்குத் தண்ணீர்தான் சிறந்த மருந்து. நிறையத் தண்ணீர் அருந்துங்கள். இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, ஒவ்வாமையைப் போக்கும்.

* குளிர்ந்த நீரில் குளித்தால்தான், அலர்ஜி உள்ள இடத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்கும்.

* தனியாகத் துண்டு, சீப்பு பயன்படுத்துவதன் மூலம் அலர்ஜி வராமலும் பரவாமலும் தடுக்கலாம்.

* ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், பன்னீர் கலந்து பூசிக்கொள்வதன் மூலம் அலர்ஜி நெருங்காது.

* ஒவ்வாமை ஏற்படும் இடத்தில், எலுமிச்சைச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெயைத் தடவலாம்.

* வேப்பிலையைத் தண்ணீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்து, உடலில் தடவி, பிறகு குளிக்கலாம்.
Tags:    

Similar News