கிச்சன் கில்லாடிகள்
தர்பூசணி பாயாசம்

இன்று தர்பூசணியில் பாயாசம் செய்யலாம் வாங்க...

Update: 2022-05-17 09:13 GMT
கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தர்பூசணி சாறு - அரை கப்
ஓட்ஸ் - கால் கப்
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - தேவையான அளவு
முந்திரி பருப்பு, பாதாம் - சிறிதளவு

செய்முறை:

ஓட்ஸை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து மிக்சியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.

பாலை கொதிக்கவைத்து ஆறவிடவும்.

பின்னர் அகன்ற பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

ஓட்ஸ் மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும் நீரில் ஊற்றி கிளறிவிடவும்.

ஓட்ஸ் வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

பின்னர் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் தர்பூசணி சாறை ஊற்றி கிளறி இறக்கி விடவும்.

பாதாம், முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து பாயாசத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
Tags:    

Similar News