கிச்சன் கில்லாடிகள்
சிக்கன் கபாப்

வீட்டிலேயே சிக்கன் கபாப் செய்யலாம் வாங்க...

Published On 2022-05-10 09:26 GMT   |   Update On 2022-05-10 09:26 GMT
சிக்கன் கபாப் என்றால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும். கடையில் வாங்கி சாப்பிட்ட சிக்கன் கபாபை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் -  அரை கிலோ (துண்டுகளாக வெட்டியது)
தயிர் - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து முள் ஸ்பூனால் நன்றாக சிக்கனை நன்றாக குத்தி விடவும். அப்போது தான் மசாலா நன்றாக உள்ளே ஏறும்.

ஒரு பௌலில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், கேசரி பவுடர், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்

பின்னர் அதில் சிக்கனை போட்டு கலந்த வைத்த பேஸ்ட்டை தடவி, ஒரு மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

பிறகு ஊறவைத்த சிக்கனை உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து, பிரட்டி வைக்க வேண்டும்.

அடுத்து, அந்த துண்டுகளை கிரில் மிஸினில் வைத்து, சிக்கன் துண்டுகளை நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.

இறுதியில் அதன் மேல் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு, மீண்டும் ஒரு நிமிடம் கிரில் மிஸினில் வைத்து எடுத்து பரிமாற வேண்டும்.

இப்போது சுவையான சிக்கன் கபாப் ரெடி.
Tags:    

Similar News