கிச்சன் கில்லாடிகள்
சிக்கன் ஊறுகாய்

இன்று நாவூறும் சிக்கன் ஊறுகாய் செய்யலாம் வாங்க..

Published On 2022-02-10 09:41 GMT   |   Update On 2022-02-10 09:41 GMT
மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய் சாப்பிட்டு அலுத்து விட்டதா? இன்று சற்று வித்தியாசமாக சிக்கனில் ஊறுகாய் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

எலும்புகள் இல்லாத சிக்கன் - 1 கிலோ
மிளகாய் தூள் - 8 மேசைக்கரண்டி
உப்பு - 7 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1/2 கப்
கடுகுப் பொடி - 2 மேசைக் கரண்டி
சீரகம் மற்றும் வெந்தையப் பொடி - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா பொடி - 1/2 மேசைக்கரண்டி
முழு பூண்டு  - 1
கறிவேப்பிலை - 5 இலைகள்
சீரகம் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் - 1/2 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் உரித்த முழு பூண்டு பற்களை அதில் போட்டு வதக்கவும்.

அடுத்ததாக கறிவேப்பிலை சேர்க்கவும்.

பின் இஞ்சி பூண்டுபேஸ்ட் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் பொடி சேர்த்து கிளறவும்.

அடுத்ததாக சிறிய பாத்திரத்தில் மிளகாய்த் தூள், உப்பு, கடுகுப் பொடி, சீரகம் மற்றும் வெந்தயப் பொடி, கரம் மசாலா பொடி, எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்குக் கிளறவும்.

இந்தக் கலவையை எண்ணெய் கடாயில் போட்டு வதக்கவும். வதக்கும் போது அடுப்பை சிறுந்தீயில் வையுங்கள்.

மசாலா நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து கலவை சிக்கனிற்குள் இறங்குமாறு வதக்கவும்.

தற்போது சுவையான சிக்கன் ஊறுகாய் ரெடி.

இதை எல்லா உணவுகளுக்கும் தொட்டுக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.
Tags:    

Similar News