லைஃப்ஸ்டைல்
ஆப்பிள் சூப்

வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிள் சூப்

Published On 2021-08-20 05:31 GMT   |   Update On 2021-08-20 05:31 GMT
ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பாக செய்து கொடுக்கலாம். இதில், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இன்று ஆப்பிள் சூப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஆப்பிள் - 2,
எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
நாட்டு சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
பால் - ஒரு டம்ளர்.

செய்முறை:

ஆப்பிளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருக்கியதும், பொடியாக நறுக்கிய ஆப்பிள் சேர்த்து லேசாக வதக்கி, 5 டம்ளர் நீர் சேர்த்து வேகவிடவும்.

ஆப்பிள் நன்றாக வெந்ததும் நாட்டு சர்க்கரை, மிளகுத்தூள், பால் சேர்த்துக் கலக்கவும்.

பரிமாறும் முன் விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

சத்தான சுவையான ஆப்பிள் சூப் ரெடி.

பலன்கள்: ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பாக செய்து கொடுக்கலாம். இதில், வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எந்த நோயும் உடலைத் தாக்காமல் காப்பதுடன், உடலை வலுவாக்கும். சருமம் பொலிவாகும். உடல் எடையைக் குறைக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
Tags:    

Similar News