லைஃப்ஸ்டைல்
நார்த்தங்காய் ரசம்

உடல் சூட்டை குறைக்கும் நார்த்தங்காய் ரசம்

Published On 2021-08-13 05:19 GMT   |   Update On 2021-08-13 05:19 GMT
நீண்ட நாட்கள் நோயினால் பாதிக்கப்பட்டு உடல் சோர்வு அடைந்தவர்கள் தினமும் நார்த்தம் பழச்சாற்றை பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து பருகி வந்தால் உடல் வலிமை அடையும்.
தேவையான பொருட்கள்

நார்த்தங்காய் சாறு - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் - 1 கப்
கடுகு, வெந்தயம் - தாளிப்பதற்கு

செய்முறை


ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

இஞ்சி, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் போட்டு தாளித்து இஞ்சி, ப.மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின்பு மஞ்சள் பொடி, பொடித்த மிளகு, சீரகப்பொடி, பருப்பு வேக வைத்த தண்ணீர் சேர்க்கவும்.

கலவை கொதித்து வரும் போது கொத்தமல்லி தழை, நார்த்தங்காய் சாறு, உப்பு சேர்த்து இறக்கவும்.

சுவையான நார்த்தங்காய் ரசம் தயார்.
Tags:    

Similar News