லைஃப்ஸ்டைல்
பச்சை பயிறு காய்கறி கஞ்சி

உடல் சோர்வை போக்கும் பச்சை பயிறு காய்கறி கஞ்சி

Published On 2020-01-23 04:22 GMT   |   Update On 2020-01-23 04:22 GMT
உடலில் நீர்சத்து குறைவாக காணப்படுபவர்கள் இந்த காய்கறிக்கஞ்சியை குடிக்கும் பொழுது உடலில் நீர்சத்து அதிகரிக்கும். இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

அரிசி - 1/2 கப்
பச்சை பயிறு - 1/2 கப்
கேரட் - 1
வெள்ளரிக்காய் - சிறிதளவு
பீன்ஸ் - 5
தக்காளி - 1
சாம்பார் வெங்காயம் - 1 கைப்பிடி
பூண்டு - 4
வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 5
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு



செய்முறை

முதலில் அரிசி, பச்சை பயிறை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊற வையுங்கள்.

கேரட், வெள்ளரிக்காய், பீன்ஸ், தக்காளி, சாம்பார் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதித்தவுடன் ஊறவைத்த அரிசி, பருப்பை போட்டு வேக வைக்கவும்.

அரிசி, பருப்பு பாதியளவு வெந்ததும் அதனுடன் உப்பு, காய்கறிகளை சேர்த்து வேக விடவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, வெந்தயம், பூண்டு  போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

வதக்கிய வெங்காயம், தக்காளியை அரிசி கலவையுடன் சேர்த்து வேக விடவும்.

30 நிமிடங்கள் கஞ்சியானது நன்றாக கொதித்து அரிசி மற்றும் காய்கறிகள் வெந்தவுடன் கீழ இறக்கி அனைவருக்கும் பரிமாறலாம்.

சத்தான காய்கறி கஞ்சி ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News