லைஃப்ஸ்டைல்
பொடி இட்லி

குழந்தைகள் விரும்பும் பொடி இட்லி

Published On 2020-01-22 04:36 GMT   |   Update On 2020-01-22 04:36 GMT
பொடி இட்லி இப்பொழுது அனைத்து உணவகங்களிலும் பிரபலமாக உணவாக உள்ளது. இட்லி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட பொடி இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள்.
இட்லி பொடி செய்ய தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை - கால் கப்
காய்ந்த மிளகாய்- அரை கப்
உளுத்தம்பருப்பு -  கால் கப்
கடலைப்பருப்பு - கால் கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி

பொடி இட்லி செய்ய தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலைகள்
கொத்தமல்லி - சிறிதளவு
சின்ன இட்லி - 20
இட்லி பொடி - 2 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி



செய்முறை

கறிவேப்பிலை இலைகளை கழுவி காயவைத்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும் அல்லது கறிவேப்பிலை இலைகள் சுருண்டு வரும்வரை வறுக்கவும்.

காய்ந்த மிளகாயை மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

அடுத்து அதில் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுக்கவும்.

பின்னர் கடலை பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் சில நிமிடங்களுக்கு வறுத்து எடுக்கவும்.

வறுத்த பொருட்களை ஆற வைத்து ஆறியதும் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து ஒரு மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது இட்லி பொடி தயார்.

(மேற்கண்டவற்றை வறுப்பதற்கு எண்ணெய் சேர்க்க தேவையில்லை வெறும் வாணலியில் வறுக்கவும்.)

செய்முறை


கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பொடி இட்லி செய்ய ஆறிய இட்லிகளை பயன்படுத்தவும் அல்லது சூடான இட்லியை ஆறவைத்து பயன்படுத்தவும்.

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் இட்லிகளை சேர்த்து கலக்கவும்.

அதனுடன் இரண்டு தேக்கரண்டி இட்லி பொடி சேர்க்கவும்.

பின்னர் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.

அதனை மிதமான சூட்டில் கிளறவும்.

மென்மையாக கிளறி, நன்கு கலந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான பொடி இட்லி தயார்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News