பெண்கள் உலகம்
கோதுமை பிரெட் உப்புமா

டயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த கோதுமை பிரெட் உப்புமா

Published On 2020-01-08 10:10 IST   |   Update On 2020-01-08 10:10:00 IST
சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் கோதுமை பிரெட்டில் உப்புமா செய்து சாப்பிடலாம். இன்று இந்த உப்புமா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை பிரெட் துண்டுகள் - 6
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
லெமன் - 1
கறிவேப்பிலை - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு



செய்முறை :

முதலில், கோதுமை பிரெட் துண்டுகளை உதிர்த்து கொள்ளவும்.

கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.

அடுத்து அதில் உதிர்த்து வைத்துள்ள கோதுமை பிரெட், உப்பு சேர்த்து கிளறவும். அதிக நேரம் கிளற வேண்டியதில்லை. 5 நிமிடங்கள் வதக்கினால் போதுமானது.

கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து கிளறி இறக்கி, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சுவையான கோதுமை பிரெட் உப்புமா ரெடி..!

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News