லைஃப்ஸ்டைல்
வைல்டு ரைஸ் சாலட்

புரதச்சத்து நிறைந்த வைல்டு ரைஸ் சாலட்

Published On 2020-01-02 04:34 GMT   |   Update On 2020-01-02 04:34 GMT
வைல்டு ரைசில் குளுட்டன், சோடியம் இல்லை. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லது. பிரவுன் அரிசியை விட இரண்டு மடங்கு புரதச்சத்து அதில் அதிகம்.
தேவையான பொருட்கள்

வேக வைத்த வைட்டு ரைஸ் (மலேசியன் அரிசி) - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
குடை மிளகாய் - பாதி
கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு



செய்முறை

வைல்டு அரிசியை வேக வைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை போட்டு அதனுடன் வேக வைத்த வைல்டு ரைஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

கடைசியாக உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.

சத்தான வைல்டு ரைஸ் சாலட் ரெடி.

பலன்கள்

வைல்டு ரைசில் குளுட்டன், சோடியம் இல்லை. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லது. பிரவுன் அரிசியை விட இரண்டு மடங்கு புரதச்சத்து அதில் அதிகம். நார்ச்சத்து இருப்பதால் செரிமானமாவது எளிது. சமச்சீரான உணவை சாப்பிட்ட பலன் கிடைக்கும். வைட்டமின் ஏ, சி. இ நிறைந்துள்ளது.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News