லைஃப்ஸ்டைல்
துவரை சுண்டல்

காரசாரமான துவரை சுண்டல்

Published On 2019-12-04 04:29 GMT   |   Update On 2019-12-04 04:29 GMT
பச்சை துவரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பச்சை துவரையில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பச்சை முழு துவரை - 1 கப்,
காய்ந்தமிளகாய் - 5,
தனியா - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் - 8,
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2.

தாளிக்க...

கடுகு, சீரகம், கறிவேப்பிலை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.




செய்முறை

பச்சை முழு துவரையை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெறும் கடாயில் காய்ந்த மிளகாய், தனியா, சீரகத்தை போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

சின்னவெங்காயத்தை மிக்சியில் 1 சுற்று சுற்றவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளித்த பின்னர், அரைத்த பொடி, அரைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த முழு துவரை, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

சூப்பரான காரசாரமான துவரை சுண்டல் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News