லைஃப்ஸ்டைல்
பாலக்கீரை மிளகு கூட்டு

புரத சத்து நிறைந்த பாலக்கீரை மிளகு கூட்டு

Published On 2019-11-25 04:39 GMT   |   Update On 2019-11-25 04:39 GMT
பாலக்கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது,. தினமும் பாலக்கீரையை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
தேவையான பொருட்கள்

பாலக்கீரை - 1 கட்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6
தேங்காய் துருவல் - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 3
புளி - சிறிதளவு
மிளகு - 2 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க

கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு



செய்முறை

பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தேங்காயை துருவிக்கொள்ளவும்.

புளியை கரைத்து கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், நறுக்கிய பூண்டு போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் பாலக்கீரையை போட்டு வதக்கவும். பாலக்கீரையை வேக சற்று தண்ணீர் தெளித்து விடவும்.

கீரை பாதி வெந்ததும் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

அடுத்து அதில் தேங்காய் துருவல், உப்பு, மிளகு தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

சத்தான சுவையான பாலக்கீரை மிளகு கூட்டு ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News