லைஃப்ஸ்டைல்
ஓட்ஸ் மக்கா சோள அடை

ஓட்ஸ் மக்கா சோள அடை

Published On 2019-11-19 04:53 GMT   |   Update On 2019-11-19 04:53 GMT
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஓட்ஸ் மக்கா சோள அடையை சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 2 கப்
மக்கா சோள மாவு - 4 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
ப. மிளகாய் - 2 முதல் 3 வரை
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெறும் வாணலியில் ஓட்ஸைப் போட்டு, வறுத்தெடுக்கவும். சற்று ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத் கொள்ளவும்.

அரைத்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சோள மாவு, மிளகாய் தூள், பெருங்காய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்துக் கொள்ளவும்.

ஆரஞ்சு பழ அளவிற்கு மாவை எடுத்து உருட்டிக் கொள்ளவும். மேற்கண்ட அளவிற்கு சுமார் 6 உருண்டைகள் வரை வரும்.

ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது எண்ணை தடவி, அதன் மேல் ஒரு உருண்டையை வைத்து வட்டமாகத் தட்டி வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கல்லில் எண்ணெய் தடவி தட்டி வைத்த அடையை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இரு புறமும் நன்றாக வேகும் வரை திருப்பிப் போட்டு சுட்டெடுக்கவும்.

அருமையான ஓட்ஸ் சோள அடை ரெடி.

குறிப்பு:

"சோள மாவு" என்று நான் குறிப்பிடிருப்பது, சூப், கிரேவி போன்றவற்றிற்குச் சேர்க்கும் "கார்ன் ஸ்டார்ச்" அல்ல. மஞ்சள் நிறத்தில் "கார்ன் மீல்" என்று கடைகளில் கிடைக்கும். இந்த மாவு இல்லையென்றால், சிறிது மக்கா சோளத்தை மிக்ஸியில் பொடித்தோ, அல்லது முழு சோளத்தை சற்று ஊற வைத்து அரைத்தோ சேர்க்கலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News