லைஃப்ஸ்டைல்
கல்யாண முருங்கை தோசை

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் கல்யாண முருங்கை தோசை

Published On 2019-11-13 04:42 GMT   |   Update On 2019-11-13 04:42 GMT
கல்யாண முருங்கையை உணவில் சேர்தது கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய், கருப்பை சார்ந்த எந்தவித உடல் பிரச்னைகளும் வராது. இன்று கல்யாண முருங்கை தோசை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப்
இட்லிஅரிசி - 1 கப்
கடலைபருப்பு - 4 ஸ்பூன்
கல்யாண முருங்கை இலை - 1 கட்டு
உப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை

கல்யாண முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கீரையை சுத்தம் செய்து நடுவில் உள்ள நரம்பை எடுத்து விடவும்.

பச்சரிசி, இட்லி அரிசி, கடலைபருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்னர் கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும். பாதி அரைந்ததும் சுத்தம் செய்த கீரை, வற்றல், பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.

அரைத்த மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

சத்தான கல்யாண முருங்கை தோசை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News