பெண்கள் உலகம்
கேழ்வரகு இட்லி உப்புமா

கேழ்வரகு இட்லி உப்புமா

Published On 2019-10-19 10:15 IST   |   Update On 2019-10-19 10:15:00 IST
கேழ்வரகில் கஞ்சி, களி, இட்லி, தோசை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கேழ்வரகு இட்லி உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :

கேழ்வரகு இட்லி - 5
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
முந்திரி - 5
இஞ்சி - 1 சிறிய துண்டு
கறிவேப்பிலை - சிறிது  



செய்முறை :

கேழ்வரகு இட்லிகளை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், மிளகாய், இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரி, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் உதிர்த்து வைத்துள்ள இட்லியை சேர்த்து 1 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.  
 
உப்பு தேவைப்பட்டால் 1/4 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.

சுவையான கேழ்வரகு இட்லி உப்புமா ரெடி.

* காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் மாலையில் இப்படி செய்து அசத்தலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News