பெண்கள் உலகம்
முளைகட்டிய வெந்தய இனிப்பு சுண்டல்

முளைகட்டிய வெந்தய இனிப்பு சுண்டல்

Published On 2019-10-08 10:15 IST   |   Update On 2019-10-08 10:15:00 IST
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது வெந்தயம். இன்று வெந்தயத்தை வைத்து சத்தான சுவையான சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முளைகட்டிய வெந்தயம் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 3
பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை:

முளைகட்டிய வெந்தயத்தை இட்லி தட்டில் வேக வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

அதனுடன் வெந்தயம், உப்பு சேர்த்து கிளறவும்.

பின்னர் வெல்லம், தேங்காய் துருவல் தூவி லேசாக கிளறி இறக்கி ருசிக்கவும்.

சத்தான வெந்தய இனிப்பு சுண்டல் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News