லைஃப்ஸ்டைல்
பார்லி கம்பு சுண்டல்

சத்து நிறைந்த பார்லி கம்பு சுண்டல்

Published On 2019-10-05 04:34 GMT   |   Update On 2019-10-05 04:34 GMT
பார்லி, கம்பில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சுவையான சத்தான சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பார்லி - ஒரு கப்
கம்பு - கால் கப்
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
கடுகு - கால் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
நெய் - சிறிதளவு
நெய்யில் வறுத்து பொடித்த பாதாம் பொடி - ஒரு டீஸ்பூன்
முந்திரி - ஒரு டீஸ்பூன்

வறுத்துப் பொடிக்க :

தனியா - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்



செய்முறை :

வெறும் கடாயில் தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை, போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

பார்லியை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

கம்பை வேக வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெந்த பார்லி, கம்பு, உப்பு, பொடித்த மசாலா பொடி, பாதாம் பொடி, முந்திரி சேர்த்து கிளறி தேங்காய் துருவல் தூவி பரிமாறலாம்.

சத்தான சுவையான பார்லி கம்பு சுண்டல் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News