லைஃப்ஸ்டைல்
தக்காளி பிரெட் சூப்

தக்காளி பிரெட் சூப்

Published On 2019-09-19 04:46 GMT   |   Update On 2019-09-19 04:46 GMT
மழை காலத்தில் சூப் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று தக்காளி, பிரெட் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பிரெட் துண்டுகள் - 4,
தக்காளி - 6,
மிளகுத்தூள், நெய் - தலா அரை டீஸ்பூன்,
வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
கோஸ் - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோஸை துருவிக்கொள்ளவும்.

தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோல் உரித்து, மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி துருவிய கோஸ், தக்காளி சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து லேசாக சூடாக்கவும்.

பிரெட்டை பொடித்து சேர்க்கவும்.

இதனுடன் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி கொத்தமல்லி, வெண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

சூப்பரான தக்காளி பிரெட் சூப் ரெடி.

சூடாக குடித்தால் ‘சூப்’பராக இருக்கும். காய் வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல், அதைச் சேர்த்தும் சூப் தயாரிக்கலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News