லைஃப்ஸ்டைல்
ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப்

ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப்

Published On 2019-09-03 04:32 GMT   |   Update On 2019-09-03 04:32 GMT
தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிக்கன், ஸ்வீட்கார்ன் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிக்கன் ஸ்டாக் செய்ய...

சிக்கன் - கால் கிலோ,
வெங்காயம், கேரட் - தலா பாதி,
செலரி -1,
பூண்டு - 3 பல்,
மிளகு - 1 டீஸ்பூன்,
உப்பு - கால் டீஸ்பூன்,
தண்ணீர் - 1 லிட்டர்.

சூப் செய்ய...

ஸ்வீட்கார்ன் - முக்கால் கப்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு,
கார்ன்ஃப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு,
முட்டை - 1.



செய்முறை :

மிளகு, பூண்டை இடித்துக் கொள்ளவும்.

கால் கப் ஸ்வீட்கார்னை அரைத்து கொள்ளவும்.

சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைக்கவும்.

கார்ன்ஃப்ளார் மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக் செய்ய கொடுத்த பொருட்களை போட்டு 1 மணி நேரம் வேகவைக்கவும். பிறகு ஸ்டாக்கை வடித்து தனியே வைக்கவும்.

சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய், ஸ்பிரிங் ஆனியன், 3/4 கப் ஸ்வீட்கார்ன் மற்றும் 3/4 கப் ஸ்வீட்கார்ன் அரைத்த விழுது, சிக்கன் சேர்த்து ஒரு கிளறு கிளறி, 5 கப்  சிக்கன் ஸ்டாக் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு கரைத்த கார்ன்ஃப்ளார் மாவை ஊற்றி சிறிது கெட்டியானதும் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

கடைசியாக அடித்த முட்டையை கொதிக்கும் சூப்பில் சிறிது சிறிதாக ஊற்றி கிளறி விடவும்.

ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து சூடாக பரிமாறவும்.

சூப்பரான ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News