லைஃப்ஸ்டைல்
வேப்பம் பூ துவையல்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த துவையல்

Published On 2019-08-28 04:34 GMT   |   Update On 2019-08-28 04:34 GMT
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது வேப்பம் பூ. இன்று இந்த வேப்பம் பூவை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தேங்காய்த் துருவல் - அரை கப்
காய்ந்த மிளகாய் - 3
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
வேப்பம் பூ - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்



செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், உளுந்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும்.

உளுந்தம் பருப்பு நன்றாக வறுபட்டதும் இதனுடன் தேங்காய்த் துருவல், வேப்பம் பூ சேர்த்து நிறம்மாற வதக்கிக் ஆற வைக்கவும்.

சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து இத்துடன் புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

சூப்பரான வேப்பம் பூ துவையல் ரெடி.

தோசைக்கு மிகச்சிறந்த சைட் டிஷ் இது. இரண்டு நாள்கள் வரை பயன்படுத்தலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News