லைஃப்ஸ்டைல்
வெண் பூசணி தயிர் சாதம்

வெண் பூசணி தயிர் சாதம்

Published On 2019-08-23 04:47 GMT   |   Update On 2019-08-23 04:47 GMT
இந்த உணவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; எலும்புகளை வலுப்படுத்தும்; மலச்சிக்கலை நீக்கும்; உடல்சோர்வு, மனச்சோர்வு நீக்கி உற்சாகத்தைத் தரும்.
தேவையான பொருட்கள் :

நறுக்கிய வெண்பூசணி - 200 கிராம்,
தயிர் - 100 கிராம் (ஒரு கப்),
கொத்தமல்லி சிறிதளவு,
குழைய வேக வைத்த சாதம் - அரை கப்
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.

தாளிக்க

கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை



செய்முறை :

வெண் பூசணியின் தோலைச் சீவிவிட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய வெண் பூசணியை கொஞ்சம் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

பூசணி நன்றாக வெந்ததும் அதில் ஒரு கப் தயிர், சாதம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பூசணி கலவையில் சேர்க்கவும்.

இறுதியாக, கொத்தமல்லி இலையைத் தூவி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்பலாம்.

சுவையான சத்தான வெண் பூசணி - தயிர்சாதம் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News