பொது மருத்துவம்

வெண்புள்ளிகள் ஏன் ஏற்படுகிறது? தடுக்கும் வழிகள்!

Published On 2024-08-18 09:40 IST   |   Update On 2024-08-18 09:40:00 IST
  • உடலில் மெலனின் நிறமி இழப்பு என்று சொல்லப்படுகிறது.
  • மன இறுக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்.

வெண்புள்ளிகள் என்றாலே எல்லோருக்கும் பயம் தான். உடலில் சருமத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் இது வரக்கூடும். இந்த பாதிப்பை 'விட்டிலிகோ' என்று மருத்துவ மொழியில் அழைப்பதுண்டு.

உடலில் `மெலனின் நிறமி இழப்பு' அதாவது `வெண்புள்ளி' ஏற்படுவதற்கு குறிப்பிட்ட தௌிவான காரணம் இல்லை. என்றாலும் மரபணு நரம்பு மண்டல பாதிப்பு வைரஸ் கிருமிகள் தாக்கம் போன்றவைகளினாலும் வெண்புள்ளி ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.

உடலுக்கு எதிர்ப்பு சக்தியை கூட்டக்கூடிய உணவுப்பொருட்கள், மீன் வகைகள், கொட்டை வகைகள், இறைச்சிகள், தானியங்கள், கோதுமை கலந்த உணவுப்பொருட்கள் முதலியவைகளில் உள்ள தாமிரச்சத்து மெலனின் அளவைக் கூட்டும்.

வைட்டமின் 'ஏ' சத்து நிறைந்துள்ள மஞ்சள், சிவப்பு, பச்சைநிற காய்கறிகள், கீரைகள், கேரட், மாம்பழம், பப்பாளி, சிவப்பு மிளகு, உருளைக் கிழங்கு போன்றவைகள் மெலனின் அளவைக் கூட்டும்.

இதேபோல் வைட்டமின் 'ஈ' சத்து நிறைந்துள்ள விதைகள், முளை கட்டிய பயிறு வகைகள், கடல் வாழ் உயிரினங்கள், கரும்பச்சை காய்கறிகள், சூரியகாந்தி விதை, பாதாம்பருப்பு, வேர்க்கடலை, பீட்ரூட், குளத்து மீன், பட்டர் புரூட், அவகோடா பழம் போன்றவைகளும் மெலனின் அளவைக் கூட்டும்.

இதுபோக மன இறுக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். உங்களுடைய சருமமும், முடியும் அதிக சூரிய ஒளியில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரசாயனப் பொருட்கள் கலந்த எண்ணெய், ஷாம்பூ, கிரீம் லோஷன் போன்றவைகளை தலைமுடிக்கோ உடலுக்கோ உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் செய்து வந்தால் மெலனின் அளவு உங்கள் உடலில் எப்பொழுதும் குறையாமல் இருக்கும். வெண்புள்ளியை நினைத்து பயப்பட வேண்டாம். 

Tags:    

Similar News