லைஃப்ஸ்டைல்
ஆவி பிடிக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க...

ஆவி பிடிக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க...

Published On 2021-08-06 06:27 GMT   |   Update On 2021-08-06 06:27 GMT
எவ்வளவு நேரம் ஆவி பிடிப்பது என்று தெரியாமல் ஆர்வ மிகுதியால் அதிக நேரம் ஆவி பிடித்து மூக்கின் உள் பகுதியில் வெப்பத்தால் வெந்து புண்ணாகும் அளவுக்கு சிலர் ஆவி பிடித்து விட்டு அவதிபடுகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கும், பாதிப்பில் இருந்து மீள்வதற்கும் ஆவி பிடிப்பதும் ஒரு சிகிச்சையாக மாறி உள்ளது. ஆவி பிடிக்க பலரும் பல யுக்திகளை கையாள்கின்றனர். எவ்வளவு நேரம் ஆவி பிடிப்பது என்று தெரியாமல் ஆர்வ மிகுதியால் அதிக நேரம் ஆவி பிடித்து மூக்கின் உள் பகுதியில் வெப்பத்தால் வெந்து புண்ணாகும் அளவுக்கு சிலர் ஆவி பிடித்து விட்டு அவதிபடுகின்றனர். ஆவி பிடிப்பது எப்படி என்பது குறித்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனையின் சித்தா டாக்டர் சுவாமிநாதனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஆவி பிடிப்பது என்பதும் ஒருவிதமான தற்காப்பு தான். பெருந்தொற்று கிருமிகள் முதலில் தாக்குதல் நடத்தும் பகுதிகளாக வாய் மற்றும் மூக்கு உள்ளது. ஆவி பிடிப்பதால் இத்தகைய கிருமிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். ஆனால், ஆவி பிடிப்பதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன.

5-ல் இருந்து 10 நிமிடங்கள் மட்டும் ஆவி பிடித்தால் போதுமானது. காலை மற்றும் இரவு ஆகிய இரு நேரங்களில் மட்டும் பிடித்தால் போதும். ஆவி பிடிப்பதற்கு தலைவலி தைலம், கற்பூரம் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. ஆவி பிடிப்பதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன. நொச்சி, வேப்பிலை, மஞ்சள், துளசி, கற்பூரவள்ளி இலை ஆகியவற்றை நீரில் கொதிக்கவிட்டு அதில் ஆவி பிடிக்க வேண்டும். நீண்ட நேரம் ஆவி பிடித்தல் என்பது தற்காப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News