லைஃப்ஸ்டைல்
ரம்ஜான் உணவுகளால் செரிமானத் தொல்லையா?

ரம்ஜான் உணவுகளால் செரிமானத் தொல்லையா? அப்ப இதை சாப்பிடுங்க

Published On 2020-05-25 09:28 GMT   |   Update On 2020-05-25 09:28 GMT
ரம்ஜான் தினமான இன்று வாயையும், வயிற்றையும் கட்டுப்படுத்த முடியாமல் ஹெவியாக சாப்பிட்டுவிட்டு செரிமானமாகாமல் தவித்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சாப்பிட்டால் இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
ரம்ஜானுக்கு முன் விரதம் இருந்த நீங்கள் அறுசுவை உணவுகளைப் பார்த்ததும் நாவை அடக்கமுடியாமல் வெளுத்து கட்டக்கூடும். அப்படி ரம்ஜான் கொண்டாட்டத்தில் கட்டுக்கடங்காத உணவுகள் உடலில் கொழுப்புகளாக சேர்ந்து எடை கூடிவிட்டதைப் போல் உணர்ந்தால் இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க...

சாப்பிடும்போது அதிகம் சாப்பிடாமல் இருக்க சிம்பிள் ட்டிக்ஸ் தண்ணீர் குடிப்பதுதான். உணவுக்கு முன் 2 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். இதனால் வயிறு கொஞ்சம் நிறைந்துவிடும். அதிக உணவும் சாப்பிட மாட்டீர்கள். கட்டுப்பாடு அவசியம் : வயிறு நிறைந்துவிட்டதை போல் உணர்ந்தால் அப்போதே சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

ரம்ஜான் என்றாலே உணவுகளும் ஹெவியாகத்தான் இருக்கும். பார்த்ததும் வாயையும், வயிற்றையும் கட்டுப்படுத்த முடியாமல் ஹெவியாக சாப்பிட்டுவிட்டு செரிமானமாகாமல் தவித்தால் கவலையே வேண்டாம். இந்த வீட்டுக்குறிப்புகளை செய்தால் செரிமானமடைந்து நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் ஏலக்காய், பட்டை, கிராம்பு போன்றவை பல வகையான உடல் உபாதைகளுக்கு உதவும். நெஞ்சு எரிச்சலுக்கு ஏலக்காய், பட்டை , கிராம்பை என ஏதாவது ஒன்றை அப்படியே வாயில் மென்று விழுங்கலாம். இல்லையெனில் இவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வெது வெதுப்பாக அருந்தலாம்.

செரிமானமின்மை , நெஞ்சு எரிச்சலை தவிர்க்க ஒரு ஸ்பூன் சோம்பை மென்று விழுங்கினால் குறையும்.

இஞ்சி பாரம்பரிய மருத்துவம். இதை தண்ணீரில் கொதிக்க வைத்து வெது வெதுப்பாக அருந்தலாம் அல்லது அப்படியே மென்று விழுங்கலாம்.

உணவு உண்ட பின் உடனே படுப்பதை தவிர்க்கவும். படுப்பது செரிமானம் தடைபட்டு நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். குறைந்தது 1 மணிநேரத்திற்கு படுக்காமல் இருப்பது நல்லது.

கார்பனேட், கியாஸ் கலந்த குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். இது pH அளவை சீர்குலைக்கும்.
Tags:    

Similar News