லைஃப்ஸ்டைல்
முதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்...

முதியோர் பராமரிப்பில் செவிலியரின் கருணைக்கரங்கள்...

Published On 2020-05-12 09:13 GMT   |   Update On 2020-05-12 09:13 GMT
முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
முதியோர் பராமரிப்பில் செவிலியர்களின் கருணைக்கரங்கள்தான், அவர்களின் ஆயுளை நீட்டிக்க செய்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வயதான காலத்தில் வீடுகளில் இருக்கும் அவர்களை தேடிச்சென்று செவிலியர்கள் பராமரிக்கின்றனர். இதனால் முதியோர்களுக்கு அவர்கள், வளர்ப்பு மகள்களாகவே விளங்குகின்றனர். அவர்களின் தியாகம் அந்த முதியோரது குடும்பத்துக்கே நம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த வகையில் முதியோர் பராமரிப்பில் ஈடுபடும் செவிலியர்கள் முதியோர்கள் பராமரிப்பு பற்றி கூறியதாவது:-

வயதானவர்கள் சமுதாயத்தில் கிடைக்கும் சுகாதார சேவைகளை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். நோய் மற்றும் நோயினால் இயலாதன்மை, இயற்கையான ஒன்று, வறுமை, மற்றும் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலை ஆகியவை தடைகளாக இருந்து அவர்களை வாட்டும். அந்த தடைகளை செவிலியர்கள் தான் அறிந்து அவற்றை அகற்ற வேண்டும். முதியோர்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை தினமும் மூன்று தடவை பயன்படுத்தலாம். தினமும் குறைந்தது ஒரு துண்டு பழமாவது சாப்பிடவேண்டும். இதில் அதிக அளவு நார்சத்து அடங்கியுள்ளது.

குறைந்தது ஒருநாளைக்கு மூன்று தடவையாவது காய்கறிகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். ஏதாவது குடிக்க வேண்டும் என்று விரும்பினால் மிதமான சூடு உள்ள பால் ஒரு டம்ளர் அருந்தலாம். தூங்கும் அறைகள் அமைதியாகவும், நல்ல காற்றோட்டத்துடன் இருக்கவேண்டும்.சரியான வாய் பராமரிப்பு நல்ல உடல் நலத்தையும் நல்ல தோற்றத்தையும் கொடுக்கும். தினமும் காலையிலும், சாப்பிட்டதற்கு பின்னும், படுக்கைக்கு முன்பும் வாயை உப்புநீரினால் கொப்பளிப்பது சிறந்தது. பாதத்தில் பிரச்சினைகள் பொதுவாக வயதானவர்களுக்கு காணப்படும்.

நீண்ட நாள் கடுமையான உழைப்பு, பொருத்தாத காலணிகளை அணிவது, பாதங்களுக்கு குறைவான இரத்த ஓட்டம், சரியாக வெட்டப்படாத விரல் நகங்கள் மற்றும் சில நோய்கள் காரணமாக ஏற்படலாம்.குளிர்ச்சியான நிலையில் நீண்ட நேரம் இருத்தல், காலணிகளால் பாதத்தில், அழுத்தம், தற்போது அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள வீட்டில் இரு....விலகி இரு என்பதோடு சத்தான ஆகாரங்களை சாப்பிடு என்பதில் முதியவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற பல்வேறு விஷயங்களை செவிலியர்கள் தங்களது முதியோர் மருத்துவ பராமரிப்பு சேவைப்பணியில் கடைபிடிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News