உடற்பயிற்சி

நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் சாவித்திரி பிராணாயாமம்

Published On 2022-09-06 04:53 GMT   |   Update On 2022-09-06 04:53 GMT
  • மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது.
  • இருதயத் துடிப்பை சீராக்குகிறது.

சாவித்திரி பிராணாயாமம் சீரான மூச்சு விடுதல் மூலம் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு இருதயத் துடிப்பையும் சீராக்குகிறது. சாவித்திரி பிராணாயாமம் செய்வதால் இருதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவது 11 பெண்கள் கலந்து கொண்ட ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 45 பேர் கலந்து கொண்ட மற்றும் ஒரு ஆய்வில் நுரையீரலின் ஆற்றல் மேம்படுவது தெரிய வந்துள்ளது.

பலன்கள்

நுரையீரலின் ஆற்றலை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகிறது. இருதய நலனைப் பாதுகாக்கிறது. சிந்தனையில் தெளிவை ஏற்படுத்துகிறது. மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது. மன அழைதியை ஏற்படுத்துகிறது

செய்முறை

பதுமாசனம் அல்லது வேறு வசதியான தியான ஆசனத்தில் அமரவும். சாவித்திரி பிராணாயமத்தைப் படுத்தவாறும் பயிலலாம். முதுகை நேராக வைக்கவும். கண்களை மூடிக் கொள்ளவும். சிறிது நொடிகளுக்கு சீரான சுவாசத்தில் இருக்கவும். பின் ஆறு வினாடிகளுக்கு மூச்சை உள்ளிழுத்து மூன்று வினாடிகளுக்கு மூச்சை உள் நிறுத்தவும்.

பின் ஆறு வினாடிகளுக்கு மூச்சை வெளியேற்றி 3 வினாடிகளுக்கு மூச்சை வெளியில் நிறுத்தவும்; அதாவது மூச்சை உள்ளிழுக்காமல் இருக்கவும். இவ்வாறு அய்ந்து முறை செய்யவும். நாளடைவில் படிப்படியாக நேரத்தை அதிகரித்து 15 நிமிடங்கள் வரை சாவித்திரி பிராணாயாமத்தைப் பயிலலாம்.

Tags:    

Similar News