உடற்பயிற்சி

தியானத்தின் முதல் படி

Published On 2022-10-05 05:17 GMT   |   Update On 2022-10-05 05:17 GMT
  • புத்தி அல்லது ஞானத்தின் அடிப்படையில் செய்யப்படுவதே ‘தியானம்’ ஆகும்.
  • தியானப் பயிற்சி மேற்கொள்பவர்கள், முதலில் தன்னை ஆன்மா என்று உணர வேண்டும்.

'நான் ஒரு ஆன்மா' என்ற உணர்வு ஏற்படாதவரை, ஒருவரால் இறைவனுடன் எந்த உறவும் கொள்ள முடியாது. பரமாத்மாவுடனான மனிதனின் உறவு, உடலால் அழியக்கூடிய தற்காலிகமானது அல்ல. ஆன்மா என்னும் மனதால் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையான உறவு.

எனவே தியானப் பயிற்சி மேற்கொள்பவர்கள், முதலில் தன்னை ஆன்மா என்று உணர வேண்டும். அதற்கு தடையாக இருப்பது உடல். அதுதான் ஆன்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் இடையே சுவரை எழுப்புகிறது. உடலின் மீதான மோகம், இறைவனிடம் இருந்து நாம் விலகவும், ஆத்மா என்ற உணர்வு, நாம் இறைவனிடம் நெருங்கவும் முதல் படியாக அமைந்துள்ளது.

தியானம் எளிமையானது

இன்றைக்கு யோகப் பயிற்சி என்பது, உடலை வருத்திச் செய்யும் பயிற்சியாக மாறிவிட்டது. அது ஆரோக்கியத்திற்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் ஆன்மாவை, பரமாத்மாவுடன் இணைக்க ஒதுபோதும் உதவாது. உடலை வருத்தும் விரதம் இருப்பது, தவம் மேற்கொள்வது போன்ற முயற்சிகளும் கூட, உடலின் மீதான அடிப்படை செயல்களில் இறங்க தூண்டுகோலாக மாறிவிடும். புத்தி அல்லது ஞானத்தின் அடிப்படையில் செய்யப்படுவதே 'தியானம்' ஆகும். இறைவனையே சிந்தித்தபடி இருந்து, அவனிடம் நம் முழு கவனத்தையும் திருப்ப வேண்டும். அவ்வாறு செய்வதே எளிய ராஜயோகமாகும்.

Tags:    

Similar News