உடற்பயிற்சி

சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் பிரச்சனையா? அப்ப இந்த முத்திரை செய்யுங்க...

Published On 2022-06-10 04:49 GMT   |   Update On 2022-06-10 04:49 GMT
  • சூரியனை பார்த்து இந்த முத்திரையை செய்யுங்கள்.
  • மைதாவினால் ஆன உணவுகள், துரித உணவுகள், எண்ணெய் பண்டங்களை தவிர்த்துவிடுங்கள்.

சிலருக்கு சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் நிலை ஏற்படுகின்றது. ஒரு நாளில் 5 முறை 8 முறை மலம் வெளியேறும். இதனால் ஆசன வாயில் வலி ஏற்படும். இதற்கு யோகா முத்திரை சிகிச்சை மூலம் தீர்வு கிடைக்கும்.

முதலில் பசிக்கும் பொழுது நன்கு மென்று கூழாக்கி சாப்பிடுங்கள். மைதாவினால் ஆன உணவு பரோட்டா போன்ற உணவை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும்.

அபான முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சோட்டதை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் நடு விரல், மோதிரவிரல் மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை தொடவும். இரு கைகளிலும் செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

பிருதிவி முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். பத்து வினாடிகள். பின் மோதிரவிரல் பெருவிரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும். இந்த முத்திரை நில மூலகம் சார்ந்தது. ஜீரண மண்டலத்தில் உள்ள குறைபாடுகளை மாற்றியமைக்கும் சக்தி பெற்றது. மண்ணீரலை நன்கு இயங்கச் செய்கின்றது.

சூன்ய முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் நடு விரலை மடித்து உள்ளங்கையில் படும்படி வைக்கவும். அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரண்டு நிமிடங்கள் காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

சூரிய ஒளி உடலில் படும்படி காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள்ளும், மாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள்ளும் சூரியனை பார்த்து இந்த முத்திரையை செய்யுங்கள்.

அதிக காரம், உப்பு, புளிப்பு குறைத்துக் கொள்ளுங்கள். மைதாவினால் ஆன உணவுகள், துரித உணவுகள், எண்ணெய் பண்டங்களை தவிர்த்துவிடுங்கள்.

மணத்தக்காளி கீரை, பசலை கீரை, தண்டங் கீரை, முருங்கை கீரை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள், வாழைத்தண்டு மாதம் ஒரு முறை சாப்பிடுங்கள். மாதுளம் பழம் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

63699 40440

pathanjaliyogam@gmail.com

Tags:    

Similar News